Header Ads



நாமலுடன் ரணில் ஏற்படுத்திய இணக்கப்பாடு என்ன..? ராஜபக்சவினரை பாதுகாப்பதால் நாட்டிலே இரத்தமே சிந்தப்படும்


 ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஏற்றுக்கொண்ட ராஜதந்திர அரசியல்வாதியாக இருந்தாலும் அவர் ராஜபக்சவினரை பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சியால் நாட்டில் இரத்தம் சிந்தல்கள் வரை பிரச்சினைகள் ஏற்படலாம் என கொழும்பு பல்லைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச நாட்டுக்கு இடி எனவும் ரணில் விக்ரமசிங்க ஒரு சாபக்கேடு எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க என்பவர் ராஜதந்திர ரீதியில் மிகவும் வரவேற்புள்ள ஒரு அரசியல் தலைவர். அவருக்கு இருக்கும் இந்த வரவேற்பை ராஜபக்சவினர் தந்திரமான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

ரணில் விக்ரமசிங்க, எவ்வித தயக்கமும் இன்றி அந்த தந்திரத்திற்கு அமைய செயற்பட்டு வருகிறார். நாமல் ராஜபக்சவுடன் இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் பின்னரே ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

ரணில் விக்ரமசிங்க என்பவர் அரச நிர்வாகம் மற்றும் ராஜதந்திர விடயங்களில் பணியாற்றுவதில் ராஜபக்சவினரை விட உச்சத்தில் இருக்கும் நபர். எனினும் அவருக்கு ஆட்சியில் இருக்கும் போது ஜனநாயகம் என்பது மறந்து போய்விடும்.

அவர் சிறந்த அறிவாளி. இதன் காரணமாகவே 69 லட்சம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணிலுக்கு பதவியை பெற முடிந்தது. அவர் பதவியை ஏற்றது குறித்து எவரும் எதிர்க்கவில்லை.

சர்வதேசமும் எதனையும் கூறவில்லை. நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை கொண்டுள்ள அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். உலகில் எந்த நாட்டிலும் இப்படி நடந்ததில்லை

ரணில் விக்ரமசிங்க அறிவாளியாக இருந்தாலும் ராஜபக்சவினரை பாதுகாப்பதற்காக அவர் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கையால் இறுதியில் ஏற்பட போவது தீ வைப்புகள் அல்ல, இரத்தம் சிந்தல்.

ராஜபக்சவினர் 2015 ஆம் ஆண்டு தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதை போன்று இம்முறையும் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். ரணில் அன்று இவர்களை பாதுகாத்தது போல் இன்றும் பாதுகாக்கின்றார் எனவும் சரத் விஜேசூரிய கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.