Header Ads



லெஸ்டர் வாழ் இலங்கை முஸ்லிம்களின் ஒன்றுகூடல் வீடியோவும், போட்டக்களும் இணைப்பு


இங்கிலாந்து லெஸ்டர் மாநகரில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் வருடாந்த ஒன்றுகூடல் மூன்றாவது முறையாக கடந்த ஞாயிறு (22/05/22) அன்று Judgemeadow Community College இல் இடம்பெற்றது. கோவிட்-19 பரவலாலும் அதன் கட்டுப்பாடுகளாலும் இரண்டு வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த இந் நிகழ்வு மீண்டும் இடம்பெற்றதானது மக்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும், நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரே இடத்தில் ஒன்று கூடி உறவுகளை புதுப்பிக்கும் சந்தர்ப்பமாகவும் அமைந்திருந்தது.

சுமார் 275 குடும்பங்களுக்கும் மேற்பட்ட  1100 நபர்கள் ஆண்கள்,பெண்கள், வயோதிபர்கள், வாலிபர்கள், சிறுவர் சிறுமியர் என கலந்து சிறப்பித்தனர். 

சிறப்பு விருந்தினர்களாக எமது சகோதர  இனங்களைச் சேர்ந்த லெஸ்டரில் இயங்கும் புத்த விகாரை , தமிழ்க்கோயில், தேவாலயம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் லெஸ்டர் மாநகர சபை உறுப்பினர்கள், இங்கிலாந்து இஸ்லாமிய அமைப்புகளின் ஒன்றிய செயலாளர் மற்றும் வேறு சில அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் என இருபதுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தமை லெஸ்டரில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் இன ஐக்கியம், சமூக ஒற்றுமை, ஏனைய சமய, சமூக, அரசியல், பிரமுகர்கள் உடனான தொடர்பு என்பவற்றை உணர்த்தியது மட்டுமல்லாது லெஸ்டர் கிழக்கு பாராளுமன்ற உறுப்பினரின் ( Claudia Webb MP) பிரசன்னம் அவற்றை உறுதிப்படுத்தியது.


ஒன்றுகூடலின் சிறப்பம்சமாக உதைப்பந்தாட்டப் போட்டி இடம்பெற்றிருந்தது. இரண்டு பிரிவுகளில் ( 12வயதற்கு கீழ்பட்டோர் , 19 வந்திற்கு கீழ்பட்டோர்) இடம்பெற்ற இப்போட்டிகளில் பங்கேற்றோருக்கான பதக்கங்களும், வெற்றி பெற்றோருக்கான கோப்பைகளும் அதே தினத்தில் கையளிக்கப்பட்டது. 

இவ் ஒன்றுகூடலை மேலும் மெருகூட்டும் வகையில்  இம்முறை இலங்கை சம்பந்தமான ஓர் சிறிய  புகைப்பட கண்காட்சியும் அதனோடு தொடர்புடைய வினாவிடைப் போட்டியும் இடம்பெற்றது. இங்குள்ள எமது வளரும் சமூகத்திற்கான எமது தாய்நாடு பற்றிய அறிவை மேம்படுத்தும் ஓர் பரீட்சார்த்த நிகழ்வாக இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பலரதும் பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாது மிகவும் பயனுள்ள பல அறிவார்ந்த தகவல்களை உள்ளடக்கி இருந்தது. இக் கண்காட்சி சம்பந்தமான வினாக்களுக்கு விடையளித்து வெற்றிபெற்ற பதின்மர் நேற்று ( சனிக்கிழமை) விருதுகளும் , சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







No comments

Powered by Blogger.