Header Ads



தேசிய ஒருமித்த அரசாங்கத்தை அமைக்க உடன்பாடு


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சை எம்.பி.க்கள் இணைந்து தேசிய ஒருமித்த அரசாங்கத்தை அமைப்பதற்கான கருத்தியல் உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சுயேச்சை எம்பிக்கள் குழுவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட சுயேச்சை எம்.பி.க்கள் இந்த விடயம் தொடர்பில் கருத்தியல் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆளும் கட்சியின் சுயேச்சை எம்.பி.க்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேட்சைக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இணங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.