Header Ads



கிப்லாவை சரி பார்த்துக்கொள்ள சந்தர்ப்பம்


இன்று (மே 28 )சவூதி அரேபிய நேரம் 12 :18 இற்கு கஃபாவுக்கு நேர் மேலே சூரியன் வருகிறது.

( ஒவ்வொரு வருடமும் மே மாதம் 27 அல்லது 28 இது ஏற்படும். இந்த வருடம் 28 ம் திகதி ஆகிய  இன்று இடம்பெறுகிறது ).

 இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளக்கப்படங்களில் விபரிக்கபடுவதுபோல்,  குறித்த நிகழ்வு இடம் பெறும் வேளை பூமியின் ஏனைய பகுதிகளில் உள்ள பூமிக்கு செங்குத்தாக நாட்டப்பட்ட பொருட்களின் நிழல் சரியாக கிப்லாவை நோக்கியதாக இருக்கும்.

கொழும்பு நேரப்படி 2:48 இற்கு இது சரியாக இடம் பெறும். ( ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்  தொழுகை நேரங்களுக்கு கணித்துக் கொள்வதுபோல் அவ்வப் பிரதேச நேரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் )

Jowsi Abdul Jabbar





No comments

Powered by Blogger.