Header Ads



அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலாவி - கற்பிட்டி பிரதான வீதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments

Powered by Blogger.