Header Ads



சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியுடன் சந்திப்பு, அனைத்து முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன


தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையை போக்க முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் அரசியலமைப்பிற்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையுடன் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 13 முக்கிய தீர்மானங்களை அதன் நிறைவேற்று சபையில் முன்வைத்து ஏகமனதாக நிறைவேற்றியது.

இத்தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இந்த பிரேரணைகள் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் போது அனைத்து முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்,  செயலாளர் சட்டத்தரணி இசுரு பாலபடபெந்தி,  மற்றும் நிறைவேற்று சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.