Header Ads



புயலுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது..? வங்கக்கடலில் 'அசானி' உருவானது, இலங்கையே பெயரிட்டது


வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழ்த்த தாழ்வு மண்டலமாக மாறி இன்று புயலாக வலுபெற்றுள்ளது. அதன்படி தற்போது உருவாகியுள்ள இந்த புயலுக்கு 'அசானி' என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10ஆம் தேதி ஆந்திரா மற்றும் ஒடிஷா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலைபெறக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக,ஆந்திரா, ஒடிஷா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் பற்றியும் இதுபோன்ற புயலுக்கு பெயர் சூட்டப்படும் விதம் குறித்தும் சில தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

1) அசானி புயலால் தமிழ்நாட்டில் பெரிய தாக்கம் இருக்காது. ஆனாலும் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

2) ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வோர் பெயர் சூட்டப்படும் வழக்கம் உண்டு. அந்த வகையில் இந்த முறை உருவாகியிருக்கும் புயலுக்கு ஆசானி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை சூட்டியிருப்பது இலங்கை. அந்நாட்டின் சிங்கள மொழியில் அசானி என்றால் 'கடும் சீற்றம்' என்று பொருள்.

நிவர் புயல்: எச்சரிக்கை கூண்டு ஏற்றுகிறார்களே - அதன் பொருள் என்ன?

வங்காள விரிகுடாவில் புதிய புயல் அபாயம்: இந்திய அரசு அவசர ஆலோசனை

நிவர் புயலுக்கு பெயர் வைத்தது இரான் - அடுத்து வரும் புயல்களுக்கு என்ன பெயர் தெரியுமா?

3) புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள் என்ற பின்ணணி சுவாரஸ்யமானது. உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இயற்கை சீற்றங்களின் தகவல்களை பெறுவதில் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக ஒவ்வோர் புயலுக்கும் பெயரிடப்படும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. உலகம் முழுவதும், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் - ஆலோசனைகளை வழங்குவதற்கும், பெயரிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

4 ) ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியா மற்றும் 12 நாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. அவை வங்கதேசம், இரான், மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகள் ஆகும்.

5) அதன்படி, ஏப்ரல் 2020ல் இந்திய வானிலை ஆய்வு மையம் புயலுக்கு பயன்படுத்தக்கூடிய 169 பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியா உள்பட 13 நாடுகளும் ஒவ்வொரு நாடும் 13 பெயர்களை வழங்குகின்றன. மொத்தம் 169 பெயர்கள் கொண்ட பட்டியலின்படி இயற்கை சீற்றங்களுக்கு பெயர்கள் சூட்டப்படும்.

6) பெயர் பட்டியல் தரும் நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் வகைப்படுத்தப்படும். அந்த பட்டியலில் உள்ளபடி அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிஃபிக் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வைக்கப்படுகின்றன.

7) இந்த தொகுப்பின் பட்டியலில் நிசர்கா, கதி, நிவார், புரேவி, தெள தே, யாஸ், குலாப், ஷாஹீன் மற்றும் ஜவாத் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளன, அடுத்ததாக வரிசையில் இருப்பது தான் அசானி.

8) இந்த அசானி புயல், மே 7ஆம் தேதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதைத்தொடர்ந்து நிகோபார் கடல் பகுதியின் வடமேற்குப் பகுதியில் மணிக்கு 280 கி.மீ வேகத்தில் இது மே 8ஆம் தேதி மாலைக்குள் புயலாக வலுவடையும் என்று கூறப்பட்டது. அதன்படியே ஞாயிற்றுக்கிழமை புயல் உருவானது. இந்தப் புயல் தென்கிழக்குக் கடற்கரையை நோக்கிச் செல்லும் என்றும் கரையைக் கடக்கும் போது மாநில கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் முழு நிலச்சரிவு போன்றவை நேரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. sources BBC

No comments

Powered by Blogger.