Header Ads



இலங்கையின் முஸ்லிம் பகுதிகளில், கால் பதிக்கிறதா சீனா..? மனைவியுடன் தூதுவர் பங்கேற்ற நிகழ்வு (வீடியோ)


 - பாறுக் ஷிஹான் -

சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக சீன தூதரகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒருகட்டமாக அம்பாறை மாவட்ட உதைப்பாந்தாட்ட கழகங்களுக்கான உதைப்பந்து விளையாட்டு பொருட்களும், பாதணியும் வழங்கும் நிகழ்வும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வறுமைக்கோட்டுக்குள் உள்ள குடும்பங்களுக்கான உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் ஸ்போர்ட்ஸ் பர்ஸ்ட் பௌண்டசனின் ஏற்பாட்டில் இன்று மாலை கல்முனை தனியார் மண்டபத்தில் அமைப்பின் இணைத்தவிசாளர் ஏ.ஜி.எம். அன்வர் நௌசாத் தலைமையில் நடைபெற்றது. 


 இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் பிரதம அதிதியாகவும் அவரது பாரியார் ஜின் ஜியாங் ஆகியோர் கலந்து கொண்டு தேவையுடைய மக்களுக்கு உணவுப்பொருட்களையும், விளையாட்டு கழகங்களுக்கான பந்து மற்றும் பாதணிகளை கையளித்தனர்.  

மேலும் சீனத்தூதுவர் கீ சென்ஹோங் பொன்னாடை போர்த்தியும் நினைவுச்சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டதுடன்  கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் யூ.எல்.அமீன் பாடசாலையின் தேவைகள் அடங்கிய மகஜரொன்றை இங்கு  சீனத்தூதுவரிடம் வழங்கி வைத்தார்.


No comments

Powered by Blogger.