Header Ads



ராஜபக்ஷர்களின் கைபொம்மை ரணிலின் தோல்வி ஆரம்பம்


- பா.நிரோஸ் -

பிரதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த ஆளுந்தரப்பினரே தோற்கடித்துள்ளதாகவும், பிரதமர் ரணில்,  ராஜபக்ஷர்களின் கைபொம்மையாக மாறியுள்ளார். 

எனவே ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விகள் இன்று முதல் ஆரம்பிக்கின்றது எனவும், அரசாங்கத்தின் தோல்விகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரதன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றும்போதே அவர் இதனைகூறினார். அவர் மேலும் கூறுகையில், 

சபாநாயாகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு பாராளுமன்றத்தில் இதுவரையில் பெண்கள் தெரிவு செய்யப்படவில்லை. உலகின் முதற் பெண் பிரதமராக, நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதிக்கும் பெண்ணை தெரிவு செய்த நாட்டில், பாராளுமன்றத்துக்குள் பெண்களை உயர்பதவிகளுக்கு நியமிக்க முடியாதென்பனை ஆளுந்தரப்பினர் உலகுக்கு காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள், நாட்டிலுள்ள புத்திஜீவிகள் சிலரும் பிரதி சபாநாயகர் பதவிக்கு நான் பொறுத்தமானவர் என்றே கூறினார்கள். புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பெண் ஒருவரே பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்றார். எனினும் புதிய பிரதமரின் முதலாவது கோரிக்கையை ஆளுந்தரப்பினர் தோற்கடித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.