Header Ads



நாடாளுமன்ற பலம் காகத்திடம் உள்ளது, அடுத்த மாதம் மருந்துகள் இன்றி மக்கள் மடிவார்கள், உணவு இல்லாமல் போகும்


“ரணில் கோ கம”, “கோட்டா கோ கம” ஆகியவற்றை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு, அனைவரும் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் நிதி அதிகாரம் மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ நாடாளுமன்றத்தின் பலம் காகத்திடம் இருக்கின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 21வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்த காகத்தின் பிடியில் இருந்து நாடாளுமன்றத்தையும் நாட்டை காப்பாற்ற முடியும்.

யார் ஆட்சியில் இருக்கின்றனரோ அவர்களுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஆதரவு வழங்கி இந்த படுகுழியில் இருந்து வெளியில் வர வேண்டும்.

அப்படி வெளியில் வந்த பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டும். யார் சரி, யார் தவறு என்பதை தேர்தலில் மக்கள் தீர்மானிக்க சந்தர்ப்பத்தை வழங்குவோம்.

அடுத்த மாதத்தில் இருந்து மருந்துகள் இன்றி மக்கள் மடிவார்கள். உணவு இல்லாமல் போகும் எனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார். TW

No comments

Powered by Blogger.