Header Ads



பிரதி சபாநாயகராக இம்தியாஸ்..? சபாநாயகராக்க விரும்பும் சஜித்


- Anzir -

பிரதி சபாநாயகருக்கான வாக்களிப்பு, நாளை வியாழக்கிழமை, 5 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியும் தமது கட்சி சார்பில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தவுள்ளது.

அந்த வகையில் சகல சமூகங்களினதும் நன்மதிப்பை பெற்ற, மூத்த அரசியல்வாதி இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார், பிரதி சபாநாயகர் போட்டிக்காக களமிறக்கப்படலாம் என, நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து Jaffna Muslim இணையத்திற்கு தகவல் கிடைத்தது.

பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கு பலம் இருக்கிறது என்பதற்கான, பரீட்சாத்தமாகவும் இது அமையுமெனவும் நம்பப்படுகிறது.

அதேவேளை, இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் சபாநாயகராக வருவதையே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதசா விரும்புவதாக அறிய வருகிறது.

இருந்தபோதும், பிரதி சபாநாயகர் பதவி கிடைத்தால் அதனை பெற்றுக் கொள்வது என்ற தீர்மானத்தில் அக்கட்சியின் பெரும்பாணனவர்கள் உள்ளதாகவும் Jaffna Muslim இணையத்திற்கு மேலும் அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.