Header Ads



ஆஸ்ட்ரா - லங்கா முஸ்லிம் கூட்டமைப்பின் (ALMA) 30 ஆவது ஆண்டு விழா (படங்கள்)


சிட்னி ALMA கூட்டமைப்பு தனது 30-ஆவது ஆண்டு விழாவை உள்ளூர் மற்றும் மாநில அரசியல் தலைவர்களின் பங்கேற்போடு கூடிய விழாவாகக் கொண்டாடியது. 

Holiday INN வார்விக் ஃபார்ம், நியூ சவுத் வேல்ஸ்-இல் நடைப்பெற்ற இந்த நிகழ்வில், ALMA கூட்டமைப்பின் தொடக்க காலத்தவர்களுக்கான கவுரவிப்பும், நியு சவுத் வேல்ஸின் எதிர்கால இலங்கை முஸ்லிம்களுக்கான கொண்டாட்டமும் நிகழ்வுற்றன.

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதங்களை ஆரம்பப் பள்ளிச் சிறார் பாட, இந்த ஆண்டுவிழா  இனிதே தொடங்கிற்று.

கடந்த நாட்களில் ALMA கூட்டமைப்பு நடத்திய இளைஞர் பயிற்சிப் பட்டறை, இதர நிகழ்வுகள், சிட்னி வாழ் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்கான நன்கொடைத் திரட்டல்கள் ஆகியன குறித்து, கூட்டமைப்பின்  செயலாளர்கள், இளைஞர் அமைப்பினர், உள்ளுர் அரசியல் தலைவர்கள் தத்தமது உரைகளில் எடுத்து விளக்கினர். 

ALMA கூட்டமைப்பின் தலைவர் உபைதுர் ரஹ்மான் மஹ்மூத்,  இளைஞர் அமைப்பின் சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

மேதகு பாராளுமன்ற உறுப்பினர் லிண்டா ஓல்ட்ஜ் மற்றும் கம்பர்லேண்ட் நகரத் தலைவர் லீசா லேக், ALMA சமுதாயம் குறித்த தங்களது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாது, பல்கலைக்கழகம் நுழையும் அல்லது பல்கலைப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு தனித்திறன் சான்றிதழ் வழங்கியும் சிறப்புச் செய்தனர். 

ஆரம்பப்பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரையிலான மாணாக்கர்கள் பங்குபெற்ற போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு,  பரிசுகள் வழங்கப்பட்ட போது, சிறார்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மேலும் திரு மஹ்மூத் அவர்கள் தன் உரையில், முப்பது வருடங்களாக பெரும் வளர்ச்சி பெற்றிருக்கும் சமுதாயம் குறித்தும், இலங்கையிலிருந்து குடிபெயர்ந்து ஆஸ்திரேலியா வந்து வாழ்வோர், இலங்கையின் பாரம்பரியத்தைச் சந்ததியினருக்கு சென்று சேர்க்கும் வண்ணம் செயல்படுத்தப் படவேண்டிய சமுதாயப் பணிகள் குறித்தும் வலியுறுத்திப் பேசினார்.

ALMA கூட்டமைப்பின் அத்தியாவசிய சமுதாயப் பணிகளை, ஆஸ்திரேலிய அரசின் அனைத்து நிலையினரும் அங்கீகரித்துப் பாராட்டுவதை, விழாவில் எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலிய மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போதும், காட்டுத்தீ பேரழிவின் போதும்,  நிவாரணப் பணிகளுக்காக பொருளாதாரம் சேகரிக்கப்பட்டு, தேவையுடையோருக்கு வழங்கப்பட்டதும் இந்நிகழ்ச்சியில் நினைவூட்டப்பட்டன.

தற்போது இலங்கையில் நடைப்பெற்று வரும் நெருக்கடி நிலை குறித்தும், சமுதாய விழிப்புணர்வுக்காக விளக்கப்பட்டது.

Save a Dream திட்டத்தின் உறுப்பினர் மோகன் செனேவிரத்னே தனது உரையில், ஆஸி வாழ் இலங்கைச் சிறார்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் குறித்து, இந்தக் கொண்டாட்டத்தின் அங்கமாக அவற்றைக் கருத்தில் கொள்ளுவதன் அவசியத்தை விளைக்கினார். இந்தத் திட்டமானது ALMA-வின் உதவியுடன், தற்கால மருத்துவ நெருக்கடியில் இலங்கையில்  பிறக்கும் பிள்ளைகளுக்கான உரிய மருத்துவ உதவிகளைப் பெற வழிவகுக்கும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இன்சுவை இரவு விருந்து வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.





No comments

Powered by Blogger.