Header Ads



8 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக, 4 பில்லியன் டாலர் நிதி தேவை


இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும் அதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலி சப்ரி  சர்வதேச ஊடகமொன்றுக்கு, அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் வட் வரியை 8 சதவீதம் வரை குறைப்பதற்கு எடுத்த தீர்மானம் தவறானதாகும்", என்று நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்யக் கூடிய நிலைமையிலுள்ள இலங்கை போன்ற நாட்டுக்கு தற்போது நடைமுறையிலுள்ள வரி வீதம் எந்தளவிலும் போதுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி வட் வரி வீதத்தினை நூற்றுக்கு 13 - 14 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 8 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்காக சுமார் 4 பில்லியன் டாலருக்கும் அதிக நிதி தேவையாகவுள்ளது.

அதனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.