Header Ads

2 விசயங்களை செய்யாமல், எவ்வளவு கடன் கேட்டாலும் கிடைக்காது,


 எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள்.

இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பேரழிவை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எதிர்வு கூறினோம்.எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளுக்கும், எதிர்க்கட்சியில் உள்ள பொருளாதார நிபுணர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அரசாங்கம் சிறிதும் கண்டு கொள்ளவில்லை.ரூபாயும் டொலரும் பூஜ்ஜியத்துக்குக் குறையும் வரை என்று காத்திருந்தனர்.இவற்றுக்கு மத்தியில் நிதி அமைச்சர் பாராளுமன்றத்தின் பக்கமே  வராமல் இருந்தார்.இன்று டொலரும் இல்லை ரூபாயும் இல்லை. ஆனால் டொலர்கள் வரும் என்று அரசாங்கம் கனவு காண்கிறது.

உலக வங்கி 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமைச்சு ஒன்று கூறியது,ஆனால் அவ்வாறு கூறி 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு அவ்வாறான உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை என உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இன்று இந்நாட்டின் நிலைமை என்ன?  நெருக்கடியின் கடைசி 3 அல்லது 4 மாதங்களில் நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன. இப்போது ஒவ்வொரு நாளும் பாத்திரிகைகளை பார்த்தால், நம் நாட்டின் தலைவர்கள் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு நிறுவனங்களிலும் உதவி கேட்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஆனால் இன்று வரை அற்ப உதவிகளே கிடைத்து வருகின்றன,ஆனால் நாட்டை கட்டியெழுப்பத் தேவையான உதவிகள் இன்னும் கிடைக்கவில்லை.காரணம் என்ன?உலக வங்கி அறிக்கை, ஐ.நா.அறிக்கை, சர்வதேச நாணய நிதிய அறிக்கையைப் பார்க்கவும், ஏனெனில் இலங்கைக்கு உதவுவதற்கு இரண்டு விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. 

வருமானத்தை விட செலவுகளே மூன்று மடங்கு அதிகம்.இதை நிவர்த்தி செய்ய வேண்டும். இரண்டாவதாக அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.இவை மேற்கொள்ளாது எவ்வளவு கடன் கேட்டாலும் கிடைக்காது.அதற்குத் தேவையான பொருளாதார,அரசியல் சீர்திருத்தங்கள் சர்வதேசத்துக்கு வழங்கப்பட வேண்டும். குறித்த சீர்திருத்தங்கள் மக்களால் கோரப்பட்டனவாக இருக்க வேண்டும்.மக்கள் கோரும் பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களாக இருக்க வேண்டும்.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் மட்டுமே உதவி செய்கிறது.எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் தொடர்பிலும் திட்டமொன்றை சமர்ப்பித்து அவர்களுடன் கலந்துரையாடி ஏற்றுக்கொண்ட பின்னரே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான உதவிகள் கிடைக்கப்பெறும்.இந்த விடயங்கள் ஊடகங்களில் வெளிவருவதில்லை.

இந்த முன்மொழிவுகள் பற்றி நாங்கள் பாராளுமன்றத்தில் பேசினோம்,ஆனால் அவை இன்னும் முன்வைக்கப்படவில்லை, ஏனென்றால் நாமும் மக்களையும்  நாட்டையும்  துன்பங்களிலிருந்து காப்பாற்ற விரும்புகிறோம். ஆனால் அது இன்னும் முன்வைக்கப்படவில்லை.நாட்டை கட்டியெழுப்புவதற்கான பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிடும் என நம்புகின்றோம்.ஏனென்றால் டொலர்கள்  கிடைக்கும் என கனவுகள் கண்டாலும் நனவாகாது.

சற்று சிந்தித்து பாருங்கள், வெளிநாடுகளில் உள்ள எமது இலங்கையர்களின் நம்பிக்கையை கூட பெற முடியாத உங்களால் எப்படி சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை பெற முடியுமா? அவர்கள் இலங்கைக்கு டொலர்களை அனுப்புவதில்லை .ஒரு அரசாங்கத்தால் எமது இலங்கையர்களின் நம்பிக்கையை வெல்ல முடியாவிட்டால், மற்ற நாடுகளின் நம்பிக்கையை எப்படி வெல்ல முடியும்? அவர்கள் இலங்கைக்கு டொலர்களை அனுப்புவதில்லை .ஒரு அரசாங்கத்தால் கூட எமது இலங்கையர்களின் நம்பிக்கையை வெல்ல முடியாவிட்டால், மற்ற நாடுகளின் நம்பிக்கையை எப்படி வெல்ல முடியும்?

உண்மையில் இந்த அரசாங்கம் ஒரு புதிய அரசாங்கம் என கூறினாலும் இது நகைப்புக்குரிய அரசாங்கமாகும்.இங்குள்ள அனைவரும் அரசாங்கத்திலிருந்தும் இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவர்கள்.புதிய யோசனைகள் திட்டங்கள் எதுவும் இல்லை. இது சர்வ கட்சி அரசாங்கம் அல்ல.அனைத்து கட்சி அரசாங்கமல்ல. எதிர்க்கட்சிகளின் அனுமதியின்றியே எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றனர். எங்கள் கட்சியின் எம்பிக்கள் இருவர் முக்கு கொடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்ப்பையும் மீறி அவர்களையும் பலியெடுத்துள்ளனர். பொருளாதாரத்தை அழித்த அரசால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா? இதை புரிந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் பொதுத் தேர்தல் மட்டுமே தற்போதைக்கு தீர்வு. ஒரு அரசாங்கம் பொதுத் தேர்தலின் மூலம் அதிகாரத்திற்கு வரும் போது,அந்த அரசாங்கம் சட்டபூர்வமான தன்மையைப் பெறுகிறது.இந்நாட்டை அழித்தவர்களால் இப்போது வெளிநாடுகளின் உதவித் திட்டங்களுக்குச் செல்ல முடியாது.

COPE வெளிப்படுத்தியதன் பிரகாரம்,டொலர் ஒன்றின் மதிப்பை 205 இல் பேனலில் வைத்திருக்க $ 5 பில்லியனை இரகசியமாக செலவழித்துள்ளனர். இப்படித்தான் நாடு ஆளப்பட்டது.இதற்கு ஒரே தீர்வு, பொதுத் தேர்தலின் மூலம் மக்களின் கருத்துகளை முன்னிலைப்படுத்தும் அரசை தேர்ந்தெடுப்பதுதான். இந்த அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதற்கான அங்கீகாரம் இல்லை.அத்தகைய அரசாங்கத்தினால் எமது நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது.

உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வு இல்லை, டீசல் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என இவற்றுக்கு தீர்வு இல்லை என்று செய்திகள் கூறுகின்றன. தீர்வை வழங்குவதற்கு இந்த அரசாங்கத்திடம் போதியளவு புதிய திட்டங்கள் இல்லை. இதனை நாம் முன்னரே கூறினோம். அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட்டதாலயே இந்நாட்டில் இந்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.