Header Ads



மக்கள் என்னை வெறுக்கின்றனர், 2 வது முறையும் பதவியில் அமர விரும்பவில்லை - ஜனாதிபதி கூறியதாக ஜீவன் தெரிவிப்பு


 மக்கள் தன்னை வெறுப்பதாகவும், மற்றவர்களை போல் இரண்டாவது முறையும் பதவியில் அமர தான் விரும்பவில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது தவறினை உணர்ந்து தற்போது செயற்படுவதாகவும்,மேலும் அரசாங்கத்தில் பதவியிலிருந்து மக்களுக்கு சேவை செய்யாது வெறுமனே பதவியில் மட்டுமே அமர விரும்பாத காரணத்தினால் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு தான் காரணமென ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தவறு செய்தவருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் என்பது தனியார் நிறுவனம் அல்ல என்பதற்காகவே ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.