Header Ads



"இஸ்லாமிய கலாச்சார உடை" - பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளில், பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவல் மக்ரோன் அதிகவாக்குகள் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் ‘இஸ்லாமிய கலாச்சார உடை’ விவகாரம் வாக்குவித்தியாசத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் வாக்களித்த இஸ்லாமியர்களில் 85% வீதமானவர்கள் இம்மானுவல் மக்ரோனுக்கே வாக்களித்துள்ளனர். இது முன்னர் எப்போதும் இல்லாத அளவு எண்ணிக்கையாகும்.

முன்னதாக - தேர்தல் பிரச்சாரங்களின் போது, ‘ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டால் - முதலாவதாக பொது இடங்களில் புர்கா (இஸ்லாமிய கலாச்சார உடை) அணிவதை தடை விதிப்பேன்!’ என மரீன் லு பென் தெரிவித்திருந்தார். அவரது இந்த பிரச்சாரத்துக்கு ‘எதிராக’ இம்மானுவல் மக்ரோன் தொடர்ச்சியாக கருத்துக்கள் வெளியிட்டு வந்தார். அதையடுத்தே இந்த தேர்தலில் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் மக்ரோனுக்கு வாக்களித்துள்ளனர்.

அதேவேளை, கத்தோலிக்கர்களில் 55% வீதமானவர்கள் இம்மானுவல் மக்ரோனுக்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

*மேற்படி தகவல்களை Ifop நிறுவனம் La Croix மற்றும் Le Pèlerin ஊடகத்தினருடன் இணைந்து வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.