சவூதி விமான நிலைய, தாக்குதலில் இலங்கையருக்கு பாதிப்பா..?
சவூதி எல்லைக்கு அருகில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில், இரண்டு சவூதி பிரஜைகள், பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை பிரஜைகளும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.
மேலும், நிலையான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
Post a Comment