Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச்செய்ய திட்டமா..? இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி காற்றில் பறக்கிறதா..??


- ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் -


முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச் செய்வதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று நாளை திங்கட்கிழமை, 20 ஆம் திகதி அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படாம் என, நம்பகரமான சட்டத்துறை வட்டாரங்களில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் கிடைத்தது.


முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச்செய்ய மாட்டோம் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் ஆகியோர் இலங்கையில் உள்ள இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்களுக்கு, வாக்குறுதி வழங்கியிருந்தனர்.


இந்த வாக்குறுதியை மீறியே, முஸ்லிம் தனியார் சட்டத்தை ரத்துச்செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தை, தாக்கல் செய்ய முஸ்தீபு நடைபெறுவதாக அறியக் கிடைத்தது.


அதேவேளை, அமைச்சரவை வட்டாரங்களில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த மற்றுமொரு தகவலின் அடிப்படையில், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் அமைச்சரவைப் பத்திரத்தை மாத்திரம் நாளை திங்கட்கிழமை கூடவுள்ள அமைச்சரவையின் போது சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அறிய வருகிறது.


மேலும் முஸ்லிம் தனியார் சட்டத்தை முற்றாக ரத்துச் செய்யாமல் தடுக்கும் பொருட்டு, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் என்ற அமைச்சரவைப் பத்திரமானது ஒரு தற்பாதுகாப்பு வியூகமாக அமையுமெனவும் அமைச்சரவை வட்டாரங்களில் இருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

No comments

Powered by Blogger.