Header Ads



4 ஆம் மாடிக்கு அழைக்கப்படுவாரா மைத்திரிபால..?


ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவரை தண்டிக்க அரசாங்கம் விரும்பினால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான்காம் மாடிக்கு அழைத்துச் சென்று விசாரித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்த மைத்திரிபால சிறிசேனவே ஆணைக்குழுவொன்றை நியமித்தார் என்றும் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபர் எடுத்த நடவடிக்கையை விமர்சித்த நீதிமன்றம், பிரதிவாதிகளை அழைக்காமல் இருவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தாகக் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் முக்கிய பொறுப்பாளியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதாகத் தெரிவித்த அவர், பார்வையற்றவர், காது கேளாதவர், வாய்பேச முடியாதவர் என எந்த ஒருவருக்கும் இது தெரியும் எனவும் 

அதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.