Header Ads



2 முஸ்லிம்கள் உட்பட 16 நிபுணர்களுக்கு பிரதமரினால் மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது


மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் பதினாறு பேருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் 54ஆவது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கௌரவ பிரதமரின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதச மாநாட்டு மண்டபத்தில்  நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் போதே இந்த மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கிவைக்கப்பட்டது.

இம்மாநாட்டில் கௌரவ பிரதமருடன் அவரது பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்களான பேராசிரியர் டப்ளிவ்.ஐ.அமரசிங்க, எரந்தி சமரகோன், எம்.சதானந்தன், எஸ்.எல்.எஃப்.அக்பர், எஸ்.கே.ரணராஜா, சனத் லென்ரோல், எஸ்.பீ.ஏகநாயக்க, கௌரி செந்தில்நாதன், எஸ்.ஷிவசுமித்ரன், ராணி சீதாம்பபிள்ளே, தர்ஷன டி சில்வா, எம்.என்.ஜிஃப்ரி, டி.கடோட்கஜன், கிரிஷான் சில்வா, நிஷேந்திர கருணாரத்ன, எச்.எம்.ஜே.என்.ஹேரத் ஆகியோர் இவ்வாறு இவ்வாறு மருத்துவ பேராசிரியர் சான்றிதழ்களை கௌரவ பிரதமரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

பேராசிரியர் டீ.ஏ.ரணசிங்க நினைவுரையை இதன்போது பேராசிரியர் எஸ்.எச்.தொடம்பஹல அவர்களினால் நடத்தப்பட்டது. மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா அற்கான அழைப்பை விடுத்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் ஆலோசகர் பேராசிரியர் டப்ளிவ்.ஐ.அமரசிங்க, தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரதீப் டி சில்வா உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. There is Only One Muslim name identifiable in the list viz. S.L.F. Akbar, although according to the Caption to the News, two Muslims were made Professors. Who is the other Muslim?

    ReplyDelete
  2. எம்.என்.ஜிஃப்ரி

    ReplyDelete

Powered by Blogger.