வெலிகம பிரதேச சபை தலைவர் பாதாளக்குழு குற்றவாளி - அமைச்சர் ஆனந்த விஜேபால
வெலிகம பிரதேச சபை உறுப்பினரான லசந்த விக்கிரமசேகர என்ற பெயருடைய இவர், வெலிகம லசந்த என்று அழைக்கப்படுவார். இவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் பாதாளக்குழு குற்றவாளி. இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைதண்டனை அனுபவித்துள்ளார். தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ஊடாகவே இருந்துள்ளார். இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளார். இந்த நபர் தொடர்பில் பல விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. SJB இவ்வாறானவர்களை தமது கட்சிக்கு எவ்வாறு தெரிவு செய்தது என்பதை அறிய முடியவில்லை. பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை அனுமதிக்கபோவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment