Header Ads



தேர்தல்களில் தனித்து போட்டியிட சுதந்திரக் கட்சி தீர்மானம் - நேர்முகத் தேர்வினை நடாத்த 5 பேரை நியமித்தது


எதிர்வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கூட்டணியாக போட்டியிடாது தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக நாளைய தினம் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர் தெரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றையும் கட்சி நியமித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து கட்சியின் மறு சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 பேர் அமைப்பாளர் பதவிகளுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கட்சி அறிவித்துள்ளது.

அனுபவம் மிக்க அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர  அமைச்சர் மஹிந்த அமரவீர , நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா  மற்றும் கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச  ஆகியோர் நேர்முகத் தேர்வினை நடாத்தும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments

Powered by Blogger.