Header Ads



16 வயதான சிறுமியின் மரணத்தில், சந்தேக நபராக ரிஷாட் மாற்றப்படுவார் - பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்


தலவாக்கலை- டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியின் மரணத்தில், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனும் சந்தேகநபராக குறிப்பிடப்படலாம் என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு, இன்று (26) விசா​ரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேற்கண்டவாறு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

“16 வயதான வீட்டுப் பணியாளரின் மரணம் மற்றும் கடத்தல் தொடர்பாக ரிஷாட் பதியுதீனும் எதிர்காலத்தில் சந்தேக நபராக மாற்றப்படுவார்” என்றும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், நீதிமன்றுக்கு அறிவித்தார்.

இந்த வழக்கில், ரிஷாட் பதியுதீனின் மனைவி,மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரர் சிறுமியை வேலைக்கு சேர்த்த இடைத்தரகர் ஆகிய நால்வரே சந்தேகநபர்களாக  குறிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

4 comments:

  1. Her parents also should be arrested
    Because they send he to work for money issue

    ReplyDelete
  2. you are right and we need to punish the educated leader Rishad.

    ReplyDelete
  3. All these are pre planned agenda.
    Like doctor shafis matter

    ReplyDelete
  4. All these are pre planned agenda.
    Like doctor shafis matter

    ReplyDelete

Powered by Blogger.