ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளுக்கு பிரதமரினால் வைத்திய உபகரணங்கள் வழங்கிவைப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா வைத்திய சேவை ஆதரவு அறக்கட்டளையினால் கொழும்பு பொது வைத்தியசாலையின் வைத்திய சேவை மன்றத்திற்கு கிடைத்த வைத்திய உபகரணங்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (06) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஆறு வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.
ருஹுணு கெரலிய அமைப்பின் வேண்டுகோளுக்கமைய கிடைத்த இந்த வைத்திய உபகரணங்கள் தங்காலை புராண குடா வனவாச விகாரையில் வைத்து தங்காலை மற்றும் வளஸ்முல்ல ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பலந்தொட, வீரகெடிய, கடுவன மற்றும் சூரியவெவ மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
நாடு முழுவதும் 150 வைத்தியசாலைகளுக்கு இந்த அறக்கட்டளையினால் இதற்கு முன்னரும் அத்தியவசிய வைத்திய உபகரணங்கள் மற்றும் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
Post a Comment