Header Ads



அதிரடியாக புகுந்த ஜனாதிபதி, அதிர்ந்துபோன அதிகாரிகள் வசமாக மாட்டினர்


வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 


சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி அவர்கள் இன்று (23) பிற்பகல் இவ் அலுவலகத்திற்கு சென்றார். 


சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல தடவைகள் வருகை தந்தபோதும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுடன், போதுமானளவு பணிக்குழாமினர் இல்லை எனக் கூறி அச்சேவை நிறைவேற்றப்படவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார். 


அலுவலகத்தை கண்காணித்த ஜனாதிபதி அவர்கள், போதுமானளவு ஊழியர்கள் இருப்பதை கண்டறிந்தார். 


அங்கு சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்ட ஜனாதிபதி அவர்கள், அவரது தேவை மற்றும் விபரங்களை கேட்டறிந்தார். 


மக்கள் தேவைகளை வினைத்திறனாகவும் குறைவின்றியும் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் பணிக்குழாமினரிடம் தெரிவித்தார். 

மொஹான் கருணாரத்ன

பணிப்பாளர்  

ஜனாதிபதி ஊடகப் பிரிவு.

2020.09.23



No comments

Powered by Blogger.