Header Adsஜனநாயக நாடு ஒன்றில், எதிர்க்கட்சியின் அதி முக்கியத்துவம்

- By: M.I.Y. Suhood -

எந்த ஒரு நாட்டில் பலமான எதிர்க்கட்சி  இல்லையோ அங்கே தரமான பாசிச ஆட்சியினைக் காண முடியும். இந்தியாவின் BJP அரசின் ஆட்சி முறைமை இதனைத் தெளிவாகக் காட்டுகின்றது. பாசிச ஆட்சியின் இன்னுமொரு கருத்தாவது: அங்கே மக்கள் ஆட்சி நடைபெறமாட்டாது. ஜனநாயக விழுமியங்கள் அங்கு பேணப்படமாட்டாது. அரசின் தலைவரே அங்கு சகலதுமாகவும் இருப்பார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச்சுச் சுதந்திரம் இருக்கமாட்டாது. சொல்பவற்றிற்குத் தலையாட்டிவிட்டு சம்பளப் பத்திரத்தில் ஒப்பமிட்டு சம்பளத்தையும் இதர வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு போக வேண்டியவர்களாகத்தான் இவரகள் பார்க்கப்படுவார்கள்.

எப்படியிருந்தபோதிலும் இலங்கை போன்ற பல்லின மக்கள் செறிந்து வாழும் ஒரு நாட்டிற்கு பலமான எதிர்க்கட்சி ஒன்று இருக்க வேண்டியது மிக அவசியமhகும். 2/3 பெரும்பான்மை நாட்டின் நல்லாட்சிக்கு என்றும் கேடுதான். அதற்கான அனுபவமும் எம்மிடம் நிறைய உண்டு. 2/3 பெரும்பான்மையை வைத்து அடாவடித்தனமாக அரசியல் மாற்றங்களைச் செய்வதனைவிட அரசமைப்பு மற்றும் வேறு திருத்தங்கள் செய்ய வேண்டுமாக இருந்தால் முழு அவையும சாதாரண பெரும்பான்மையில் ஒன்று சேரந்து செய்வதுதான் சிறப்பான ஜனநாயகப் பண்பாக அமையும்.

பெரமுனவின் வெற்றியினை பெரும்பாலோர் எதிர்பார்த்ததுதான். ஆனால் UNP இப்படியான பினனடவைச் சந்திக்கும் என்பது எதிர்பாராத நிகழ்வுதான். இதற்கு ரணில் மாத்திரமல்ல அஙகுள்ள இரண்டாம் மூன்றாம்  நிலைத் தலைவரகளும் மக்களுக்குப் பதில் அளிக்க வேண்டியவரகளாக இருக்கினறனர்.

2019ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெரமுன பெற்ற வாக்குகள் 6,924,255. ஐதேக பெற்ற வாக்குகள் 5,564,239. மேலதிக வாக்குகள் 1,360,016. ஐதேக அதிக வாக்குகள் பெறாமைக்கு அப்போது பல காரணங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. 01 - வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட காலதாமதம். 02 - அதனால் நடைபெற்ற உள்ளக போட்டிகள் 03 - குழுக்களாகப் பிரிந்து நின்றமை 04 - பிரச்சாரத்திற்கான காலம் போதாமல் இருந்தமை. 05 -  தலைவர்களே பிரிந்து நினறமையால் தேர்தலுக்கு மக்கள்முன் கொண்டு செல்லப்படவேண்டிய தேர்தல் விஞ்ஞாபணம் அதிகளவு தாமதத்தினை ஏற்படுத்தியமை. இதனால் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 1,360,016 ஆகக் காணப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலில் காணப்பட்ட வாக்கு வித்தியாசம் பெரமுன  6,853,693 -  SJB 2,771,984 -  4,081,709. இரண்டு பாரிய தேர்தலுக்குமிடையில் ஏற்பட்ட இந்த மிகப் பாரிய வாக்கு வித்தியாசத்திற்கு மிகப் பெரிய காரணம் இருந்த தலைவர்கள் "அரசியல் அடாவடித்தனத்தினை" கட்சிக்குள் இருந்தபடியே மக்களைப்பற்றியும் நாட்டைப் பற்றியும் சிந்திக்காது நடத்தி முடித்தமைதான். இதனால் பாதிக்கப்படப் போகின்றவரகள் இடையிலுள்ள சாதாரண எளிய மக்கள்தான். இதனைப் பற்றி எல்லாம் எந்த அரசியல் வாதியும் அதிகம் யோசிக்கமாட்டார்கள். மறுபக்கமாகச் சொல்லப்போனால் தமது "வாழ்க்கை வசதிகள்" மேம்படல் வேண்டும் என்ற சிந்தனைதான் அவரகளுக்குள் காணப்படுகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் எதிராகவுள்ள இவ்விரு கட்சிகளையும் ஒன்றாக இணைத்தால்த்தான் எதிர்வரும் ஐந்து வருடங்களின் பின்னர் பலமான எதிர்க்கட்சியாகவோ அல்லது அரசுத் தரப்பாகவோ காணமுடியும். இல்லாவிட்டால் அரசுத் தரப்பிலிருந்து தவறான புரிந்துணர்வில் வெளியேறக்கூடிய சிறு தலைவரகளைக்கொண்ட குழு பிற்பட்ட காலத்தில் மக்கள் ஆதரவைக்கோரி வெற்றி பெறவும் கூடும். அனுமானங்களைவிட உடன் சூழ்நிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இருக்கக்கூடிய தலைவரகள் இரு கட்சிகளையும் இணைத்து பலமான கட்சியாக பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்தாவது அரசின் மக்கள் விரோத செயற்பாட்டிற்கு (அப்படி ஏதும் நடந்தால்) தமது குரலை உயர்த்திக் காட்ட முடியும்.

No comments

Powered by Blogger.