Header Adsதேசியப் பட்டியலை, விட்டுக்கொடுக்க தயாரான இம்தியாஸ்


- Anzir -


ஐக்கிய மக்கள் சக்திக்கு, இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலின், மூலம் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.


இதனை பங்கிட்டுக் கொள்வதில், பங்காளி கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண்பட்டுக் கொண்டன.


குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் சார்ந்த (மனோ, றிசாத், ஹக்கீம்) தரப்புக்கள், தமக்கு ஒவ்வொரு தேசியப் பட்டியல் வீதம் 3 தேசியப் பட்டியல் ஆசனங்களை கோரியிருந்தன.


இந்நிலையில் நெருக்கடியை தவிர்க்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையை தக்கவைக்கவும், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்கார் தனக்கு ஒதுக்கப்பட்ட, தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டுக்கொடுக்க இணங்கியுள்ளார்.


எனினும், சஜித் பிரேமதாச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இம்தியாஸ் தேசியப் பட்டியலில் இருந்து ஒதுங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.


சிறுபான்மைக் கட்சிகளும், இம்தியாஸ் எக்காரணம் கொண்டும் தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது அவரின் சேவை நாட்டுக்கும்  சமூகத்திற்கும் தேவையென சுட்டிக்ககாட்டியுள்ளன.


மேலும்  சமூக ஆர்வலர்கள், ஜப்னா முஸ்லிம் ஆசிரியர் அடங்கலான இன்னும் சிலரும், இதையொத்த கருத்துக்களை இம்தியாசிடம் கூறியிருந்தன.


இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று வியாழக்கிழமை 13 தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களில், இம்தியாசின் பெயரும் உள்ளீர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

 1. தேசியப்பட்டியல் பாராளுமன்ற அங்கத்தவர் இம்தியாஸ் பாகிர் மார்க்கார் அவர்கள் கண்டிப்பாக இம்முறை பாராளுமன்றம் செல்ல வேண்டும். இழந்து போன அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற அங்கத்தவர்களையும் குறிப்பாக நீதி, நியாயம்,சட்டம் செயற்பட வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்களை மிகவும் சரியாக பாராளுமன்றத்திலும் குறிப்பாக இந்த நாட்டு மக்களுக்கும் தௌிவாக விளக்குவதற்கு நாம் அவரைப் போன்ற ஒருவரை தற்கால கட்டத்தில் நிச்சியம் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அவரின் பிரநிதித்துவம் கண்டிப்பாக பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என இந்த சமூகம் சார்பாகவும் நீதியையும் சட்டத்தையும் மதிப்பவன் என்றவகையிலும் எமது பணிவாக வேண்டுகோளை மதிப்புக்குரிய இம்தியாஸ் பாகிர் மார்க்கார் அவர்கள் புறக்கணிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்ைக எமக்கு இருக்கின்றது.

  ReplyDelete
 2. சிலர் இருக்கிறார்கள் வெளியில் நல்ல மனிதர் ஆனால் வீட்டுக்குள்ளே பெரும் பிரச்சினைக் காரன்.அது போல் தான் இம்தியாஸும் வெளியிலே நல்ல மனிதன் ஊருக்குள்ளே பிரச்சினைக் காரன்.2015 பொதுத் தேர்தலிலே இப்திகார் ஜெமீலைத் தோற்கடிப்பதற்காக லக்‌ஷ்மன் விஜயமான்னவை பேருவலைக்கு கொண்டு வந்து ஆதரவு கொடுத்து வெற்றி பெற வத்து இப்திகாரை தோற்கடித்தார்.இம்முறை தேர்தலிலே அஜித் பெரேராவைக் கொண்டு வந்து வாக்குச் சேர்த்துக் கொடுத்தார் என்றாலும் அஜித் பெரேரா தோற்றுப் போனார்.இப்திகாரையும் தோற்கடித்தார்.இப்திகாரின் ஒரு கூட்டத்துக்காவது அழைப்பு விடுத்தும் வரவில்லை.காரணம் இப்திகார் தொடர்ந்தும் பதவியில் இருந்தால் எதிர் காலத்தில் அவருக்கோ அல்லது அவரது மகனுக்கோ பேருவலை அமைப்பாளர் பதவி கிடைக்காமல் போகும் எனற சுய நலமே.இப்திகார் தோற்கவில்லை அவர் தோற்கடிக்கப் பட்டார்.இதுதான் உண்மை.விடயம் தெரியாதவர்கள் சமூகத்துகும் நாட்டுக்கும் இவர் தேவை என்கிறார்கள்.எனது முதல் வாக்கு 1989 பொதுத் தேர்தல் அதுதான் இம்தியாஸின் முதல் பாரளுமன்றத் தேர்தல்.அன்றிலிருந்து அவரோடு அவரின் வெற்றிக்கு அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெரும் வரை சண்டை பிடித்துக் கொண்டு வேலை செய்தவன்.அவரின் சுயரூபம் பின்னர் தான் விளங்கியது.இது தான் உண்மை.

  குறிப்பு:
  இதை கட்டாயம் பிரசுரிக்கவும்.

  ReplyDelete
 3. இலங்கை முஸ்லிம்களிற்கான முக்கிய நபராக கருதப்படும் பாக்கிர்மாக்கார் அவர்களுடைய மகன் இம்தியாஸ் பாக்கீர்மாக்கார் தற்போது இலங்கை முஸ்லிம்களின் பொக்கிஷம் அவரை இழப்பதென்பது முஸ்லிம்கள் விடும் தவராகத்தான் என்ன தோன்றும்.

  ReplyDelete
 4. Makool என்ற பெயருடன் மேலே எழுதப்பட்ட கருத்து அவரின் உள்ளக்கிடக்ைக மட்டுமல்ல அரசியல் பற்றிய அவருடைய குறுகிய சிந்தனையைத் தௌிவாகக் காட்டுகிறது. நாம் பேசுவது குறுதிய மட்டச் சிந்தனையல்ல. தேசிய அரசியலில் சரிசமமாக செல்லக்கூடிய ஆற்றலும் திறமையும் மிக்க பரந்த சிந்தனையுடைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றி மாத்திரம் தான்.

  ReplyDelete
 5. என்னைப் பொறுத்தவரை இம்தியாஸ் நாகரீகமானவர் நாகரீக குறைவாக அரசியல் செய்வோரோடு இணைந்து செல்வது கடினமாக இருக்கும்.

  ReplyDelete
 6. என்ன பொருத்தமற்றில் இப்போதைக்கு பாராளுமன்றதுக்கு கதிரையை சுடாக்குவதுக்கு ஆட்கள் தேவை இல்லை அசாத் சாலியை போன்று சமுகத்துக்கு நடக்கும்
  அனிதியை தட்டி கேட்கும் அவர் தேசிய பட்டியலில் வந்திரூக்க வேண்டும் இருந்தும் சமுகத்துக்கு செய்யவேண்டிய பெரிய விடயம் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உடனே தனது
  தேசியபட்டியல் ஆசனத்தை இராஜினாமா செய்து அசாத் சாலிக்கு மாற்றி கொடுக்க வேண்டும்

  ReplyDelete
 7. Professional translation நீங்கள் தூர இருந்து பார்க்கிறீர்கள் அது நீராராகத் தெரிகிறது.கிட்ட வந்து பார்த்தால் அது காணல் நீர்.கடைசியாய் நடந்த இரு பொதுத் தேர்தலிலும் களுத்துறை மாவட்ட முஸ்லிம் பிரதினிதித்துவம் ஆயிரத்துக்கும் உட்பட்ட வாக்குகளாலேயே இப்திகார் ஜெமீல் தோற்கடிக்கப் பட்டார்.அதற்கு முக்கிய பங்கு இம்த்யாஸுக்கு உண்டு.அதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.முஸ்லிமை தோற்கடித்து சிங்களவரை வெற்றி பெற வைத்தார்.சும்மா பொய்க்கு சமூகப் பற்று பேசி ஒரு பிர்யோசனமும் கிடையாது.உண்மையா பொய்யா என்று அவரிடம் ஒரு பேட்டி எடுத்துப் பார்க்கவும்.இன்றி வேசதாரிகளைத் தான் இன்று நல்ல மனிதர்கள் என்கிறார்கள்.நாம் சமூகப் பிரதி நிதித் துவத்துக்கு உழைத்தோம்.அவர் அத்ற்கெதிராக உழைத்தர்.

  ReplyDelete
 8. திஸ்ஸ அதனாயக்கவுக்கு கொடுக்காமல் விடலாமல்லவா

  ReplyDelete

Powered by Blogger.