Header Ads



சவுதி அரேபியாவில் கொரோனா - ஒரு லட்சத்தை நெருங்கும் பாதிப்பு

சவுதி அரேபியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது என அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்க உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,121 பேருக்கு கொரோனா பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,869 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 34 பேர் பலியானதை அடுத்து அங்கு பலி எண்ணிக்கை 676 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.