Header Ads



உலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் 4 லட்சத்தை தாண்டியது


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
  
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 69.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 590-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்துள்ளது.

No comments

Powered by Blogger.