Header Ads



குடும்பத்தினருடன் பதுங்குழிக்குள் டிரம்ப்...

கறுப்பினத்தை சேர்ந்த நபரின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றவேளை பாதுகாப்பு காரணங்களிற்காக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதுங்குழிக்குள் அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளை மாளிகைக்கு முன்னாள் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றவேளை டிரம்ப் பதுங்குழிக்குள் அழைத்து செல்லப்பட்டார் அவர் சுமார் ஒரு மணிநேரம் அங்கிருந்தார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்பெண்மணி மெலேனியாiவையும் அவர்களின் மகன் பரனையும் அதிகாரிகள் அழைத்துச்சென்றனர் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டிரம்பினை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தினால் அவருடைய குடும்பத்தவர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என்பது வெள்ளை மாளிகiயின் விதிமுறை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு நிலைமை சிவப்பு என்ற கட்டத்திற்கு சென்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வெள்ளை மாளிகையில் பணிபுரிபவர்கள் தங்களை யார் என காண்பிப்பதை தவிர்க்கவேண்டும் இரகசிய நுழைவாயிலை பயன்படுத்தவேண்டும் என மின்னஞ்சல்கள் பணியாளர்களிற்கு அனுப்பப்பட்டன என சிஎன்என் தெரிவித்துள்ளது.


இதேவேளை ஜனாதிபதிக்கான பதுங்குழிக்குள் டிரம்ப் அழைத்துசெல்லப்பட்டார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்ங்களில் ஈடுபட்டவர்கள் இரகசிய சேவைப்பிரிவை சேர்ந்தவர்களுடன் மோதலில் ஈடுபட்டதுடன் போத்தல்கள் உட்பட ஏனைய பொருட்களை வீசி எறிந்ததுடன் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றதை தொடர்ந்து டிரம்ப் பதுங்குழிக்குள் அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள்?கேவலம் கெட்ட அராஜகர்கள் ஆட்சியில் அமர்ந்தால்
    இப்படியான மனிதநேயமற்ற அரச கைக்கூலிகள் தங்களது கைவரிசையை காண்பிக்க பின்னிற்பதே இல்லை.இனவெறியன் றம்ப்

    ReplyDelete
  2. SHIII SHIII,VETKAM, VETKAM,
    VALLARSHU ENGIRAAN,
    PATHUNGU KULIKKUL OLITHUKOLKIRAAN.
    OREYADIYAAKA PUTHAIKULIYIL
    OTHUNGIVITTAL ENNA,????
    VETKAMAA??? CORONAVUKKU KIRUMI
    NAASHINI KUDIKKACHONNA AALU IVAN.

    ReplyDelete

Powered by Blogger.