Header Ads



சொய்சபுர தாக்குதல் சந்தேக நபர், மினுவாங்கொடயில் தலைமறைவாகி இருந்தபோது சுட்டுக்கொலை

கல்கிஸ்ஸ, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சந்தேகநபர் மினுவாங்கொட பகுதியில் தலைமறைவாகி இருப்பதாக பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இன்று அதிகாலை 12.03 மணி அளவில் குறித்த நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸார் மீது சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இதன்போது பொலிஸார் மேற்கொண்ட எதிர் தாக்குதலில் சந்தேக நபர் காயமடைந்து திவுலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

திவுலபிட்டிய பல்லபான பகுதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 50 வயதுடைய பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் களனிய குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.