கஞ்சிபானி இம்ரானின் தந்தையை கத்தியால் குத்தியவர் கைது
பிரபல போதைப்பொருள் கடத்தல் காரர் கஞ்சிபானி இம்ரானின் தந்தை மாளிகாவத்தை பகுதியில் வைத்து கத்திக்குத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கத்திக்குத்துக்குள்ளானவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment