கொரோனாவில் இருந்து தப்பிக்க, இலங்கை வருகிறார்களா போராக்கள்
இந்தியாவின் மும்பை நகரில் வசித்து வரும் போரா 200 முஸ்லிம்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
போரா முஸ்லிம் மக்களின் தலைவரான சைப்டீன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் வரை இலங்கையில் தங்கியிருப்பதற்காக அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருப்பதுடன் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வாடகைக்கு அமர்த்தப்படும் விமானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இவர்கள், பண்டாரவளை பிரதேசத்தில் தங்கியிருக்க போவதாக கூறப்படுகிறது.
எனினும் இவர்களை தனிமைப்படுத்தும் விதம் தொடர்பாக இதுவரை தெளிவான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை.
டொலர்களுக்காக இப்படியான ஆபத்தான தீர்மானங்களை எடுப்பது குறித்து விமான நிலைய ஊழியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

பனம் கொடுத்தால் இனவாதம் வாயை மூடிவிடும்
ReplyDeleteசெத்தாலும் சுட மாட்டோம்
ReplyDeleteசேர்த்து வாருங்கள் டாலரை!