தேர்தல் கூட்டங்களில் 500 பேருக்கு மேல் பங்குகொள்ள முடியாது - நிறைய நிபந்தனைகள் விதிப்பு
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடத்தப்படலாம்! மஹிந்த தேசப்பிரிய
பொதுத்தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்தில் நடத்தப்படலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான திகதி எதிர்வரும் திங்கட்கிழமையன்று தீர்மானிக்கப்படும்.அத்துடன் வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
இதனையடுத்து வேட்பாளர்களின் பெயர்கள்,இலக்கங்கள் என்பன வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுத்தேர்தல் தொடர்பாக சுகாதாரத்துறையினர் பரிந்துரைத்துள்ள ஒழுங்குவிதிகளில் பிரசாரக்கூட்டங்கள் மற்றும் குழுக்கூட்டங்கள் தொடர்பில் முக்கிய விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
கட்சி தலைவர்களின் தலைமையில் மாவட்ட மட்டக்கூட்டம் நடத்தப்படும் போது அதில் 500 பேர் மாத்திரமே பங்கேற்கமுடியும்.
ஒவ்வொருக்கும் இடையில் ஒரு மீற்றர் தூரம் கடைபிடிக்கப்படவேண்டும்.
இதன்போது கூட்டத்தில் பங்கேற்பவர்களின் முழுமை விபரங்களுடன் அவர்களுடைய தொலைபேசி இலக்கங்களும் சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் குழுக்கூட்டங்களில் 100 பேர் வரை மாத்திரமே பங்கேற்கமுடியும் என்பதும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையாக உள்ளது.
இதேவேளை வாக்குப்பெட்டிகள் இந்தமுறை பலலைகளில் அமைக்கப்படாமல் காட்போட் பெட்டிகளாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் வாக்குசாவடிககளில் கடமைகளில் ஆயிரக்கணக்கான புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment