Header Ads



இஸ்ரேலுக்கு எதிராக போராடும் எந்த, நாட்டுனும் இணைந்து ஈரான் சண்டையிடும்


இஸ்ரேலுக்கு எதிராக போராடும் எந்த நாட்டுனும் இணைந்து ஈரான் சண்டையிடும் என்று, அந்நாட்டின் மூத்த தலைவர் அயத்துலா அலி காமெனி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈரானும், இஸ்ரேலும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவிற்கு ஆதரவாக ஈரான் இராணுவம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரான் மூத்த தலைவர் அயத்துலா அலி காமெனி, இஸ்ரேலுக்கு எதிராக இணைந்து போராடும் எந்தக் குழுவுடனும், எந்த நாட்டுடனும் இணைந்து சண்டையிட ஈரான் தயாராக உள்ளது.

இதைக் கூறுவதற்கு எந்தத் தயக்கமும் ஈரானுக்கு இல்லை. இஸ்ரேல் அரசை அகற்றுவது என்பது இஸ்ரேல் மக்களை அகற்றுவது அல்ல. எங்களுக்கு இஸ்ரேல் மக்களுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெஸ்ட் பேங்க் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் தொடர்பாக அவசரக் கூட்டம் ஒன்று பாலஸ்தீன அதிபர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. முதுகெலும்புள்ள முஸ்லிம் நாடுகளில் முதன்மையானது இது.

    ReplyDelete
  2. allah will help muslim nation liberating palestine whole lamd from isreal terrorist
    allah give strength hizbullah , iran , all muslim help , saudi hyporctic rulers should expel

    ReplyDelete
  3. America has been successful in keeping powerful Islamic states away from Iran so far. Time is ripe now for all Islamic states, be it sunni or shia, to join hands and become a powerful voice. If not Palestine state would be history.

    ReplyDelete

Powered by Blogger.