குளவிக்கொட்டுக்கு இலக்காகி, பெண்ணொருவர் உயிரிழப்பு
கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்ணொருவர், குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (25) காலை உயிரிழந்துள்ளார்.
ஹட்டன்- எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த, 48 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தாயான, அம்பிகா மலர் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அத்துடன், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 6 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 8 பேர், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment