Header Ads



இந்தப் படுகொலைக்கு பதில் சொல்லப்போவது அதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா?

(எம்.எப்.ஏ. பாஸித்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் நீண்டகாலமாக குடிநீர் விநியோகமானது முன்னறிவித்தல் இன்றி தொடர்ச்சியாக தடைப்பட்டுவருகின்றது. 

குறிப்பாக இந்த ரமழான் மற்றும் இன்றைய பெருநாள் தினத்தில் கூட இந்நிலைமையே தொடர்கிறது.

இது தொடர்பில்,  சாய்ந்தமருது நீர்த்தாங்கியில் ஏற்பட்டுள்ள பழுது ஒன்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நீர் நிரப்பப் படாமல் காணப்படுவதாகவும், இதனால் அயல் கிராமம் ஒன்றின் நீர்த்தாங்கியினூடாக தற்காலிக நீர் வினியோகம் இடம்பெறுவதனாலேயே குறித்த நீர் விநியோகத் தடை ஏற்பட்டு வருவதாகவும் அறியமுடிகிறது. 

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முன்னர் குடிநீர் விநியோகத்திற்கு முக்கியத்துவம் வழங்கி நீர் வழங்கப்பட்டதாகவும், அப்போது இந்த பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லை என்றும், இப்போது விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

மேலும், இந்த நீர்த்தாங்கி ஆனது தொடர்ந்தும் இவ்வாறு நீர் நிரப்பப்படாமல் இருக்குமாக இருந்தால், அந்த நீர்த்தாங்கியானது முற்றாக சேதமடைந்து பின்னர் நீர் நிரப்பவே முடியாத நிலைக்கு சென்று விடக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக அறியவருகின்றது.

அதிகரித்த சன நெரிசல் காரணமாக சாய்ந்தமருது பிரதேசத்தின் நிலக்கீழ் நீரானது மாசுபட்ட நிலையில், இந்த நீர்த்தாங்கி அமையப்பெற்றதானது ஒரு வரப்பிரசாதமே, சாய்ந்தமருது பகுதியின் சனப் பரம்பலானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறானதொரு அரிய வளத்தை நாம் இழந்து நிற்பதானது துரதிர்ஷ்டமே.

மக்களின் பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டு வானளாவ உயர்ந்து கம்பீரமாகக் காட்சி தரும் இந்த நீர்த்தாங்கியானது நம் கண் முன்னே நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கின்றது. 

இந்தப் படுகொலைக்கு பதில் சொல்லப்போவது அதிகாரிகளா? அல்லது அரசியல்வாதிகளா?

3 comments:

  1. இந்த செய்திக்கான தலைப்பு பொருத்தமற்றதாகவும் வாசகர்களை ஏமாற்றும் ஒன்றாகவும் அமைந்துள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. பள்ளிவாசல்தான் முழு பொறுப்பும் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. பொறுப்புதாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறான பிரச்சினைகளை மக்கள் அனுபவித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தின் மூலம் வாழும் இவ்வகையான பொறுப்புதாரிகள் தொடர்ந்து மக்களின் சாபத்தையே சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.