Header Ads



இலங்கையர்களால் நேசிக்கப்படும் வெற்றிகரமான தலைவர் - பிரதமருக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி

நாட்டின் பிரதமரான மஹிந்த ராஜபக்சவிற்கு அவரது சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கையில் ஐந்து தசாப்தங்களை பூர்த்தி செய்வதனை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமருக்கு இந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தின் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார்.

அண்மைய அரசியல் வரலாற்றில் இலங்கை வாழ் மக்களுக்கு, மஹிந்த ராஜபக்ச என்னும் பெயர்; மிகச் சிறந்த ஓர் அரசியல் ஆளுமையாக தடம் பதித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்த மஹிந்த ராஜபக்ச இரண்டு தடவைகள் நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கடமையாற்றியுள்ளார். 

இன்று இலங்கையில் மக்களினால் நேசிக்கப்பட்டு வரும் வெற்றிகரமான தலைவராக திகழ்வதுடன் இன்றும் பிரதமராக நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக சேவையாற்றி வருகின்றார். அவரது அரசியல் பயணம் மேலும் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.