Header Ads



ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - போப் பிரான்சிஸ்

ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.

வாடிகன் சிட்டியில் வெளிப்புறத்தில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். சுமார் 3 மாத காலத்திற்கு பிறகு நடந்த இந்நிகழ்ச்சியில் 130க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பாலோனார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், 

தேசியத் தலைவர்கள் தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். தற்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும்.

நீண்டகால பொருளாதார மற்றும் சமூகத் தீர்வுகளை தீர்த்து வைக்க வேண்டும். ஆயுதங்களுக்கு செலவழிக்கும் தொகையினை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நாட்டின் தலைவர்களை கேட்டு கொண்டார்.

வாடிகன் தோட்டத்தில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆலயங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

No comments

Powered by Blogger.