Header Ads



கொரோனா குணமடைந்தோர் எண்ணிக்கை 800 ஐ கடந்தது, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11,056 பேர் வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி தற்போது வரை 801 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதுவரை 1620 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். 

இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 809 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களான பனிச்சங்கேணியில் 7 பேர் மற்றும் ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையிலுருந்து 8 பேர் என மொத்தம் 15 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதழ்கள் வழங்கி கடந்த 29 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

29 ஆம் திகதி வரை 11,056 பேர் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கொவிட் 19 பரவல் தடுப்பு தேசிய பயன்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 5,154 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 

29 ஆம் திகதி வரை மொத்தம் 708 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். 

366 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 342 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.