Header Ads



இலங்கையில் ஒரேநாளில் 150 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 1469

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இன்று (27) இரவு 11.55 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,453 இலிருந்து 1,469 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் ஆகக் கூடுதலாக 137 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவ்வெண்ணிக்கையை கடந்து இன்று -27- ஒரே நாளில் 150பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,469 பேரில் தற்போது 727 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 732 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 75 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

அடையாளம் - 1,469
குணமடைவு - 732
இன்று அடையாளம் - 150
இன்று குணமடைவு - 20
சிகிச்சையில் - 727
மரணம் - 10

1 comment:

  1. மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
    (அல்குர்ஆன் : 30:33)

    ReplyDelete

Powered by Blogger.