அல்லாஹ்வின் இல்லங்கள் சுவிஸில் மீண்டும் திறப்பு, முஸ்லிம்கள் மகிழ்ச்சி - 11 வாரங்களுக்கு பிறகு ஜும்ஆ (படங்கள்)
உலக சுகாதார ஸ்த்தாபனம் WHO அமையப் பெற்றுள்ள சுவிஸ் நாட்டில், இன்று 29 ஆம் திகதி, வெள்ளிக்கிழமையிலிருந்து மீண்டும் பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு தொழுகைகள் ஆரம்பமாகியுள்ளன.
அந்தவகையில் இன்று வெள்ளிக்கிழமை, பல பள்ளிவாசல்களில் குத்பாவுடன் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது.
பள்ளிவாசல்களுக்கு செல்வோர் தமது பெயரையும், கையடக்கத் தொலைபேசி இலக்கத்தையும் எழுத வேண்டும். இந்தப் பட்டியல் தொடர்ந்து 14 நாட்களுக்கு வைத்திருக்கப்படல் வேண்டும்.
பள்ளிவாசலில் வுளுச் செய்ய முடியாது, இடைவெளி பேணி தொழுவதுடன், ஓரு வழியால் பள்ளிவாசலுக்கு வருவோர் பள்ளியிலிருந்து வீடுசெல்ல மறு வாசலை பயன்படுத்த வேண்டும். தொழுகை முடிந்தபின் பள்ளிவாசலுக்கு வெளியே கூடிநிற்றல் கூடாது உள்ளிட்ட மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டே பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 12 வயதுக்கு குறைந்தவர்களும் இருமல், தடுமல் உள்ளவர்களும் பள்ளிவாசலுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் சில பள்ளிவாசல்கள் இன்று 30 பேரை மாத்திரமே, பள்ளிவாசல்களுக்குள் அனுமதித்தன. சில பள்ளிவாசல்களில் 2 முறைகள் ஜும்ஆ தொழுகை நடத்தப்பட்டுள்ளது.
மிக நீண்டவாரங்களுக்கு பிறகு, அல்லாஹ்வின் இல்லங்கள் மீண்டும் திறக்கப்பட்டமை குறித்து, சுவிஸ் வாழ் முஸ்லிம்கள் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதேவேளை இலங்கை முஸ்லிம்களினால் நிர்வகிக்கப்படும் சூரிச் - சிலீரன் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலிலும் இன்று -29- ஜும்ஆ தொழுகை நடைபெற்றது.
கோரோனா காலத்திலும் இப்பள்ளிவாசலில் தறாவிஹ், கியாமுல்லைல் மற்றும் இரவுநேர நல்லமல்கள் நடைபெற்றன.
பள்ளிவாசல் தலைவர் மௌலவி, அல்ஹாஜ் ஹனீப் மொஹமட் சகரிய்யா தொழுகைகளை நடத்தினார்.
இலங்கையர்களின் பள்ளிவாசலிலும், சுவிஸ் நாட்டு அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்தல்களை கடைபிடித்து இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, கிருமிநீக்கியும் ஜமாத்தர்களின் உபயோகத்திற்காக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





All praise be to Allah Alhamdulillah,
ReplyDeleteயா அல்லாஹ் முழு உலகத்திலும் உள்ள அனைத்து பள்ளி வாசல்களையும் திறந்து நல்ல அமல் செய்வதற்கு எங்கள் அனைவருக்கும் கிருபை செய்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
ஆம், அல்லாஹ்வுடைய வீடுகளான இறையில்லங்களில் இபாதத் வணக்கவழிபாடுகளை நடாத்தும் போது உரிய சுகாதார முறைகளைப் பேணி நடந்து கொள்ளவும் நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக.
ReplyDelete