மண்ணறையிலிருந்து எப்படி மனிதர்கள் தீர்ப்பு நாளில் எழுப்பப்படுவார்கள் என்பதற்கு, வெட்டுக்கிளிகளை இவற்றை உதாரணம் காட்டும் குர்ஆன்
வெட்டுக்கிளிகள். குர்ஆன், மண்ணறையிலிருந்து எப்படி மனிதர்கள் தீர்ப்பு நாளில் எழுப்பப்படுவார்கள் என்பதற்கு இவற்றை உதாரணம் காட்டுகிறது (குர்ஆன் 54:7).
வெட்டுக்கிளிகள் வேகமாகவும், அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. ஒரு வெட்டுக்கிளி அதிகபட்சம் 300 முட்டைகள் வரை இடும். மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்து இவற்றின் சந்ததிகள் வெளியே வருகின்றன. ஒரு சதுர கிலோ மீட்டரில் எட்டு கோடி வெட்டுக்கிளிகள் வரைக்கூட வெளியே வரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளி படையெடுப்பு எனும் விசித்திர செய்தியானது ஒரு பிரம்மாண்ட நிகழ்வாகும். எந்த அளவிற்கு என்றால், 1895-ஆம் ஆண்டு அமெரிக்கா/கனடாவில் நடந்த வெட்டுக்கிளி படையெடுப்பு 2900 கிலோமீட்டர் நீளத்திற்கும் , 180 கிலோமீட்டர் அகலத்திற்கும் இருந்தது. இதில் பங்கெடுத்த வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் கோடியாகும். இந்த நிகழ்வு கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
Aashiq Ahamed
Aashiq Ahamed

அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
ReplyDelete(அல்குர்ஆன் : 7:57)
www.tamililquran.com