Header Ads



முஸ்லிம்களை இஸ்லாமிய முறைப்படி, அடக்கம்செய்ய சந்தர்ப்பத்தை வழங்குங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை இஸ்லாமிய சமய முறைப்படி அடக்கம் செய்ய சந்தர்ப்பத்தை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதன் மூலம் வைரஸ் பரவும் என அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப ரீதியில் உறுதிப்படுத்த முடிந்தால், அரசாங்கம் தற்போது கையாளும் நடைமுறை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 180 நாடுகள் முஸ்லிம் மக்களுக்காக இந்த சலுகையை வழங்கியுள்ளன.

இலங்கை அவ்வாறு செய்யவில்லை என்றால், அதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் இருக்குமாயின் அதனை ஏற்றுக்கொள்ள தயார்.

இறந்த முஸ்லிம்களை தகனம் செய்வது என்பது முஸ்லிம் மக்களின் மனத்தில் பெரும் வருதத்தை ஏற்படுத்தும் நிலைமையாகும்.

ஆகையினால், இஸ்லாமிய முறைப்படி இறந்தவர்களை அடக்கம் செய்வது குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை ஆராய்ந்து பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த முஸ்லிம்கள் இருவர் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. Hon.former minister ....
    Intha arasaankam nam makkalay entha alawkku modayyarhalaaha aakkuhinrathu...
    Makkalay paathuhaakka neengal sila per arasaankatthil irunthum kooda arasiyal sambantham wenaam ithu arasaanka Dr.s edukkura mudiway edunkal enru kedu ketta suhaadaara amaichar solwaaraaha irunthaal intha naattin sirupaanmay makkaluku kudukkum urimam enge????
    Enayya naadauhalum erikkiriraarhal enraal athuku naanum mouniyaaaha irukkalaam
    ...bt ithu paccha pacchyaaha thettath theliwaaha pulanpaduhirathu ithil ullukkul maraimuha arasiyal....
    Wendaam intha araajaham wendaam...
    Nicahayam arasaal ithuku emathu islaamiya murayla adakkam seywathu Patri aaraaya mudiyum athuku awarhal Thayaar bt ullukkul ingum arasiyal wilayaattu...
    Nichayam iwarhal awarhal wanagum iraiwanuku payappudaathawarhal......
    Nam naadu moonnera iwarhlthaan mukkiya ethirihal....

    ReplyDelete

Powered by Blogger.