Header Ads



இரவிரவாக சஜித், ஹக்கீம், றிசாத் பேச்சு - முஸ்லிம் பகுதிகளில் வேட்பு மனு தயாரிப்பது தாமதம்


- அன்ஸிர் -


திங்கட்கிழமை இரவு -16- ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோரை சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அம்பாறை, குருநாகல், புத்தளம், மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சஜித் அணியில் முஸ்லிம் வேட்பாளர்களை நியமிப்பது குறித்து இதன்போது குறிப்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அம்பாறையில்  தமக்கு 5 இடங்கள் தரப்பட வேண்டுமென ஹக்கீம் வலியுறுத்த தமக்கு 2 இடங்கள் தரப்பட வேண்டுமென றிசாத் வலியுறுத்தியுள்ளார்.

குருநாகலில் மு.கா. க்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில், தமது கட்சி சார்பிலும் ஒருவர் நிறுத்தப்பட வேண்டுமென றிசாத் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் ஹக்கீம் 4 இடங்களை கேட்டுள்ளார்.  அதற்கு றிசாத் பதியுதீன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே புத்தளத்தில் மு.கா. அ.இ.ம.கா. ஆகியன தனித்துக் கேட்பதை சஜித் தரப்பு விரும்பவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெரிதாக இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நள்ளிரவையும் தாண்டி நடைபெற்றுள்ள இக்கலந்துரையாடலில் 2 முஸ்லிம் கட்சிகளின் இழுபறி நிலையினால், வேட்புமனு பத்திரங்களை நிறைவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சஜித் தரப்பினர் தமக்குள் பேசிக் கொண்டதாகவும் மேலும் அறிய வருகிறது.

சஜித் அணியில் உள்ள முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர், இத்தகவலை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம்  உறுதிப்படுத்தினார்.

2 comments:

  1. ENGALAKKU MEESAI PATTHUTHU
    IVARHALUKKU SURUTTU PATTHA WEENDUMA??DUNYA AASAI DUNYA ULLAWANUKKUTHASN.EVVALUWU IRUNTHAALUM PODDHATHU.BE UNITY

    ReplyDelete

Powered by Blogger.