தில்ஷானுக்கு தேசியப் பட்டியல்
முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர், திலகரத்ன தில்ஷான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
தில்ஷான் எதிர்வரும் போதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் காலி மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
எனினும் காலி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் போட்டியிடுகின்ற காரணத்தினால் அவருக்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை.
இதன் காரணமாகவே அவர் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
Post a Comment