Header Ads



இலங்கையில் கொரோனா 52 ஆக அதிரிப்பு, 243 பேர் மருத்துவ கண்காணிப்பில்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 2 பேர், இன்று (19) இனங்காணப்பட்டுள்ளனர்

அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (17) இரவு வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு  43 பேர்  உள்ளானமை உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (18) அறிவிக்கப்பட்டது.

இவர்கள் கொழும்பு அங்கொடை IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 243 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.