Header Ads



போர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்


மத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பிரித்தானியாவின் லண்டனுக்கு அனுப்பப்படுகிறது.

சவுதி உள்ளுர் ஊடகத்தின் படி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தனது தம்பியான துணை பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மானிடம் இரு நகரங்களுக்கும் சென்று அமைதிக்கு அழைப்பு விடுக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானில் ஹீரோவாகக் கருதப்படும் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம் என ஈரான் சபதமிட்டுள்ளது.

இதை தொடர்ந்து பழிவாங்கும் அச்சத்தின் மத்தியில் சவுதி அரேபியா இந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

அரசியல் அறிவியல் பேராசிரியர் அப்துல்கலெக் அப்துல்லா கூறியதாவது, வளைகுடாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ள செய்தி தெளிவாக உள்ளது:

மற்றொரு போரின் வலி பிராந்தியத்திற்கு அழிவுகரமானதாக இருக்கும், தயுவு செய்து எங்களை விட்டுவிடுங்கள் என டிரம்பிடம் கோரியுள்ளனர்.

எந்தவொரு இராணுவ மோதலிலும் நாங்கள் தான் முதலில் பாதிக்கப்படுவோம், எனவே விஷயங்கள் கையை மீறி செல்லாமல் பார்த்துக்கொள்வது எங்களின் முக்கிய கடமை என தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Even ra manddala oru kundu podunga

    ReplyDelete
  2. வேறென்ன அமெரிக்காவின் போர்க்களமாக வளைகுடாவே அல்லவா மாறிவிடும். அழிந்தால் அமரிக்காவின் வீரர்களும் போர்த்தளபாடங்களும்தானே. இங்கு அப்படியல்லவே. அழிக்கப்பட்டால் மீட்பதற்கு எதுவுமேயிலலாமல் அல்லவா போய்விடும்.

    ReplyDelete
  3. ஈரானின் அரசியல் தந்திரம் மிகவும் காத்திரமானது. இப்போது டராம்பின் உடைமைகள், கட்டடங்கள்,வியாபார ஸ்தலங்களைத் தாக்க ஈரான் திட்டமிடுவது ட்ரம்ப் அதிர்ச்சியில் உருகிப்போவான். அத்துடன் யுத்த சமாசாரம் அப்படியே ஸ்தம்பித்துவிடும். அவனுடைய தலைக்கு 80 மில்லியன் டொலர் தான் பெறுமதி என ஈரான் செய்தியனுப்பியமை நிச்சியம் டரம்ப் இனி நிம்மதியாகத் தூங்க மாட்டான்.

    ReplyDelete
  4. GREAT DECISION FROM ARAB WORLD.... AT LAST THEY REALIZED THE NEED OF AVOIDING WAR IN THE REGION.... May Allah make them realize the need to stay away from the friendship with this enemy (USA Administration) of Islam

    ReplyDelete

Powered by Blogger.