"தாமரை மொட்டு சின்னமே, மக்களுக்கு மிகவும் பரீட்சையாமானது"
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணியின் சின்னத்தில் போட்டியிடுவது உசிதமானது என இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்கஹ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொதுஜன முன்னணியின் கட்சி சின்னத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றிப்பெற்றுள்ளதாகவும், அதற்கமைய தாமரை மொட்டு சின்னம் மக்களுக்கு மிகவும் பரீட்சையாமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment