சுவிசில் இஸ்லாமிய கற்கை நெறிகளை நிறைவுசெய்த, இலங்கை பெண்களுக்கான பட்டமளிப்பு விழா (படங்கள்)
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய (EIMF) ஏற்பாட்டில், மஸ்ஜிதுல் ரவ்ளா பள்ளிவாசலில் நடத்தப்பட்டுவந்த இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பட்டமளிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை (31) கிறாத்துடன் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இலங்கை இஸ்லாமிய சகோதரியினால், முஸ்லிம் சகோதரிகளின் நலன்கருதி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பாடநெறிகள் சிலீரன் மஸ்ஜிதுல் ரவ்ளா பள்ளிவாசலில் நடத்தப்பட்டு வந்தது.
நிகழ்வில் பிரதம அதீதியாக ரூமேனியா நாட்டை சேர்ந்தவரும், புனித இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டவரும் தற்போது கற்பித்தல் துறையில் ஈடுபட்டிருப்பவருமான ஹதீஜா பங்கேற்றார்.
தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமைக்கான காரணம் மற்றும் இஸ்லாமிய கற்கை நெறிகளை கற்பதன் அவசியம் உள்ளிட்ட காரணிகளை அவர் தனதுரையில் விளக்கினார்.
ஒவ்வொரு துறையிலும் தமது திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கு, விசேட சான்றிதழும் வழங்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.
அதேபோன்று கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்ட சகோதரிக்கு, மாணவிகள் விருது வழங்கி கௌரவித்தனர். கற்பித்தலின் போது அவர் மூலம் அடைந்த பயன்களையும் விளக்கி சிறிய உரைகளையும் நிகழ்த்தினர்.
கற்றல் நடவடிக்கையில் பங்கேற்ற மாணவிகள் விதம்விதமான உணவுகளை தயாரித்து அவற்றை காட்சிப்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கற்றல் நடவடிக்கையில் பங்கேற்ற மாணவிகள் விதம்விதமான உணவுகளை தயாரித்து அவற்றை காட்சிப்படுத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
புகைப்பட உதவி - அமான்







Masha Allah...people who went to Swiss recently have the freedom to practice and learn their religion. but we in SL living for more than 1000 years, being questioned?
ReplyDelete